இந்தியா

பதற்றத்தை தணிப்பதற்கான முதல் படியை இந்தியா எடுக்க வேண்டும்: மெகபூபா முஃப்தி

Published On 2025-05-10 13:57 IST   |   Update On 2025-05-10 13:57:00 IST
  • பாகிஸ்தான் நேற்று பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
  • இந்தியா பதிலடி கொடுத்த நிலையில் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு பாகிஸ்தான் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி இந்தியாவின் தலைநகரான டெல்லியை தாக்க முயற்சி செய்துள்ளது. இந்திய ராணுவம் இந்த முயற்சியை முறியடித்ததுடன், பாகிஸ்தானை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் 6 விமான தளங்களை தாக்கியதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி, இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தை தணிக்க முதல் படியை இந்தியா எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மெகபூபா முஃப்தி கூறுகையில் "துணைக் கண்டத்தில் இந்தியா தனது தலைமை பங்கை ஏற்றுக்கொண்டு, பதற்றத்தைக் குறைப்பதற்கான முதல் படியை எடுக்க வேண்டும்.

இந்தியா நிமிர்ந்து நின்று, உண்மையான பலம் அதன் மென்மையான சக்தியிலும், அமைதிக்கான அர்ப்பணிப்பிலும் உள்ளது. அணு ஆயுதங்களில் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய தருணம் இது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தை தணிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Tags:    

Similar News