இந்தியா

இந்தியாவில் புதிதாக 199 பேருக்கு கொரோனா

Published On 2023-06-08 06:49 GMT   |   Update On 2023-06-08 06:49 GMT
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 214 ஆக இருந்தது.
  • தற்போது 2,687 பேர் கொரோனாவிற்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 214 ஆக இருந்தது. இன்று 199 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தொற்று எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 293 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 341 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 57 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,687 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 144 குறைவு ஆகும்.

கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, உத்தரகாண்டில் தலா ஒருவர் என 2 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News