பிறந்தநாள் வாழ்த்து கூறிய அதிபர் புதினுக்கு நன்றி: பிரதமர் மோடி
- பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
- இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு மோடிக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரஷிய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், எனது பிறந்தநாளுக்கு தொலைபேசியில் அழைத்து அன்பான வாழ்த்து கூறிய எனது நண்பர் அதிபர் புதினுக்கு நன்றி. நமது சிறப்பு வாய்ந்த மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உக்ரைன் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியா அனைத்து சாத்தியமான பங்களிப்பையும் செய்ய தயாராக உள்ளது என பதிவிட்டுள்ளார்.