இந்தியா

ஆபத்தான நிலையில் இந்தியா கூட்டணி: உமர் அப்துல்லா எச்சரிக்கை

Published On 2025-12-06 21:03 IST   |   Update On 2025-12-06 21:03:00 IST
  • இந்தியா கூட்டணி ஆபத்தான நிலையில் உள்ளது.
  • அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய அபாயத்தில் உள்ளது என்றார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் இன்று நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

கூட்டணியில் உள்ள உட்பூசல்கள், பாஜவின் தொடர்ச்சியான தேர்தல் முயற்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால், இண்டியா கூட்டணி ஆபத்தான நிலையில் இருக்கிறது. அது ஐசியூவுக்கு மாற்றப்படக்கூடிய ஆபத்தில் உள்ளது.

இண்டியா கூட்டணியில் அமைப்பு ரீதியான, தொடர் தோல்விகளை சுட்டிக்காட்டுவது அவசியமாகிறது.

பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது மற்றும் பீகாரில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தொகுதி பங்கீட்டில் விலக்கப்பட்டது ஆகியவை இந்தியா கூட்டணிக்குள் முக்கிய பிரச்சனையாக இருந்தது.

பா.ஜ.க.வில் வலுவான உழைக்கும் நெறிமுறைகள் இருக்கிறது. அந்த வேகத்துடன் ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி உறுதியுடன் போட்டியிடுகிறது.

ஆனால் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சில சமயங்களில் அலட்சியமாக செயல்படுவது தெரியவருகிறது என்றார்.

Tags:    

Similar News