டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு தாக்கத்தை இந்தியா மதிப்பீடு செய்து வருகிறது: மத்திய அமைச்சர்
- இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 26 சதவீதம் வரி விதிப்பு.
- டிரம்ப் நடவடிக்கையால் இந்திய பொருளாதாரதம் பாதிக்கப்படையும் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதித்துள்ளது. இது இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும், மோடி இதற்கு எதிரான எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். பொருளாதார வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை மதிப்பீடு செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்த கொண்டபோது டிரம்பின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பங்கஜ் சவுத்ரி "டொனால்டு டிரம்பிற்கு அமெரிக்கா முதன்மையாக இருக்கலாம். ஆனால், மோடிக்கு இந்தியாதான் முதன்மையானது. அமெரிக்கா அமல்படுத்தியுள்ள பரஸ்பர வரி விதிப்பின் தாக்கத்தை மதிப்பிட்டு வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.