இந்தியா

நடுரோட்டில் இளம்பெண்ணை நிர்வாணமாக்கி வாலிபர் ரகளை- 15 நிமிடங்கள் நிற்க வைத்து பாலியல் தொல்லை

Published On 2023-08-09 04:23 GMT   |   Update On 2023-08-09 06:38 GMT
  • வாலிபர் ஆத்திரமடைந்து இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.
  • பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார்.

திருப்பதி:

ஐதராபாத் ஜவகர் நகர் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் இருந்து 28 வயது இளம்பெண் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு வெளியே வந்தார்.

அப்போது வழியில் மது போதையில் இருந்த மாரய்யா (வயது 38). என்பவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதனை வாலிபரின் தாய் அருகில் இருந்து வேடிக்கை பார்த்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம் பெண் மாரய்யாவை தாக்க முயன்றார்.

இதில் வாலிபர் ஆத்திரமடைந்து இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து நிர்வாணமாக்கினார்.

அப்போது அந்த வழியாக பைக்கில் சென்ற பெண் ஒருவர் இந்த சம்பவத்தை கண்டு வாலிபரை தடுக்க முயற்சித்தார். அவரையும் வாலிபர் தாக்கினார்.

இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் பலமுறை கெஞ்சியபோதும் மது போதையில் இருந்த மாரய்யா அவரை சுமார் 15 நிமிடங்கள் நடைபாதையில் நிர்வாணமாக நிற்க வைத்தார். மேலும் பாலியல் தொல்லை கொடுத்தார்.

ஆனால் அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். யாரும் அந்த பெண்ணுக்கு உதவ முன் வரவில்லை.

பின்னர் மாரய்யா அங்கிருந்து கிளம்பியதும் சிலர் அருகில் இருந்த பிளக்ஸ் பேனர்களை எடுத்து அந்த இளம்பெண் மீது போர்த்தினர். மேலும் ஜவகர் நகர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாரய்யாவை நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News