இந்தியா

100-வது சுதந்திர தினத்தில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும்.. பிரதமர் மோடி அதிரடி..!

Published On 2023-08-15 18:22 IST   |   Update On 2023-08-15 18:22:00 IST
  • செங்கோட்டையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
  • இதனை பூர்த்தி செய்ய கடின உழைப்பு மிகவும் அத்தியாவசியமானது.

2047-ம் ஆண்டு இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் போது இவ்வாறு கூறினார்.

நாட்டின் 77-வது குடியரசு தினத்தை ஒட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இந்தியா 2047-ம் ஆண்டு வளர்ந்த நாடாக இருக்கும் என்ற கனவோடு முன்னோக்கி நகர்கிறது. "இது வெறும் கனவல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை பூர்த்தி செய்ய கடின உழைப்பு மிகவும் அத்தியாவசியமானது."

 

"ஏற்கனவே வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள், சவால்களை எதிர்கொண்டு கடந்திருக்கும் நாடுகள், என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்டு கூறுவதற்கு தேசிய அடையாளம் உண்டு. நாம் நமது தேசிய அடையாளத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும். 2047-இல் இந்தியா தனது 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்"

"நாம் எதற்காகவும் நிறுத்தக்கூடாது, கீழே இறங்கக்கூடாது. இதற்கு மிக உறுதியான கொள்கைகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற குணம் உள்ளிட்டவை அவசியம் இருக்க வேண்டும்," என்று தெரிவித்தார். இதுதவிர நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

Tags:    

Similar News