இந்தியா

இளையராஜா, பி.டி. உஷாவுக்கு நியமன எம்.பி. பதவி- மத்திய அரசு பரிந்துரை

Published On 2022-07-06 15:20 GMT   |   Update On 2022-07-06 15:20 GMT
  • பல்வேறு எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் நியமன எம்.பி.க்கள் பெயர்கள் பரிந்துரை
  • இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில மாநிலங்களாகவே பேசப்பட்டது

புதுடெல்லி:

இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை மத்திய அரசு பரிந்துரை செய்யும்.

அவ்வகையில், மாநிலங்களவையில் பல்வேறு உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான விஜயேந்திர பிரசாத் மற்றும் கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா கோவில் நிர்வாகி வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவைக்கு மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.


பிரதமர் மோடியுடன் பி.டி.உஷா

இளையராஜாவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படலாம் என கடந்த சில மாநிலங்களாகவே பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இளையராஜா உள்ளிட்ட 4 பேரை நியமன எம்.பி.க்களாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்ட தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News