இந்தியா

மனைவி என நினைத்து பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திய கணவன்..

Published On 2025-06-08 11:25 IST   |   Update On 2025-06-08 11:25:00 IST
  • ரேஷ்மாவை காய்கறி கத்தியைக் காட்டி கொலை செய்வதாக மிரட்டினார்.
  • பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜூபேதா (26) அவர்களின் சண்டையை நிறுத்த வந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட்டைச் சேர்ந்த சலீம் (60) மற்றும் ரேஷ்மா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவர், மற்றொரு மகள் ஐதராபாத்தில் வசிக்கிறார். பக்ரீத் பண்டிகையையொட்டி சலீம் தம்பதியினர் ஐதராபாத்தில் உள்ள தங்கள் மகளின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு, சலீம் குடிபோதையில் வந்து தனது மனைவி ரேஷ்மாவுடன் சண்டையிட்டார். இந்த நிலையில், ரேஷ்மாவை காய்கறி கத்தியைக் காட்டி கொலை செய்வதாக மிரட்டினார்.

அவர் கத்திக் கொண்டே வெளியே ஓடிவிட்டார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜூபேதா (26) அவர்களின் சண்டையை நிறுத்த வந்தார். ஆனால், ஜுபேதாவின் வருகையை கவனிக்காத சலீம், தனது மனைவி ரேஷ்மா என்று தவறாக நினைத்து கத்தியால் குத்தியுள்ளார்.

படுகாயமடைந்த ஜுபேதா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உள்ளூர்வாசிகள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த ஜுபேதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சலீம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News