இந்தியா

பரபரப்பான சந்தையில் மனைவியை சுட்டுக் கொலை செய்த கணவன் - உ.பி.யில் அதிர்ச்சி

Published On 2025-09-05 03:45 IST   |   Update On 2025-09-05 03:45:00 IST
  • தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மம்தா தனது மகளுடன் தனியா வாடகை அறையில் வசித்து வந்தார்.
  • ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் விஸ்வகர்மா பின்தொடர்ந்து சென்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் கணவர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக் கொன்றார்.

கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இறந்தவர் கஜ்னியைச் சேர்ந்த மம்தா சவுகான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் விஸ்வகர்மா சவுகானை போலீசார் கைது செய்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த தம்பதியினர் ஒன்றரை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு 13 வயது மகள் உள்ளார். கணவன்-மனைவி இவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மம்தா தனது மகளுடன் தனியா வாடகை அறையில் வசித்து வந்தார். 

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று, ஸ்டுடியோவில் புகைப்படம் எடுக்க வீட்டை விட்டு வெளியில் வந்த மம்தாவை கணவர் விஸ்வகர்மா பின்தொடர்ந்து சென்றார்.

மம்தா ஸ்டுடியோவுக்குள் சென்று வெளியே வந்ததும் அவரை வழிமறித்து விஸ்வகர்மா வாக்குவாதம் செய்தார். ஒரு கட்டத்தில் அவர் தனது கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார். அங்கிருந்தவர்கள் மம்தாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 

Tags:    

Similar News