இந்தியா

பெங்களூரில் பயங்கரம்: ஓட்டல் அறையில் காதலியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.டி ஊழியர்

Published On 2025-06-10 01:29 IST   |   Update On 2025-06-10 01:29:00 IST
  • கொலை செய்யப்பட்டவர் ஹரிணி (33), இரண்டு குழந்தைகளின் தாய்.
  • யஷாஸ் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு, கத்தியுடன் வந்துள்ளார்.

கர்நாடக தலைநகர் பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெங்களூரில் பயங்கரம்: ஓட்டல் அறையில் காதலியை 17 முறை கத்தியால் குத்திக் கொன்ற ஐ.டி ஊழியர்

அறையில், ஐடி ஊழியர் ஒருவர் தனது காதலியை கத்தியால் கொடூரமாக குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் கெங்கேரி பகுதியில் உள்ள பூர்ணா பிரக்யா லேஅவுட்டில் வெள்ளிக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், இரண்டு நாட்களுக்குப் பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்படி, கொலை செய்யப்பட்டவர் ஹரிணி (33), இரண்டு குழந்தைகளின் தாய். கொலை நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹரிணி, கெங்கேரியைச் சேர்ந்த தனது காதலனான யஷாஸ் (25) என்ற ஐடி ஊழியருடன் OYO வில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த யஷாஸ், ஹரிணியை கத்தியால் தொடர்ச்சியாக 17 முறை குத்தியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குடும்ப அழுத்தம் காரணமாக ஹரிணியஷாஸுக்கும் இருந்த தொடர்பை முடித்துக் கொள்ள முயன்றபோது, யஷாஸ் அவளைக் கொலை செய்துள்ளார். யஷாஸ் கொலையை முன்கூட்டியே திட்டமிட்டு, கத்தியுடன் வந்துள்ளார்.

கொலைக்குப் பிறகு தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்ட யஷாஸ், வீட்டுக்கு திரும்பி, போலீசுக்குத் தகவல் அளித்தார். பின் போலீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவரை விசாரணைக்கு பின்  போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.  

Tags:    

Similar News