இந்தியா

கடும் வெயில் எதிரொலி - திரிபுராவில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளிகளும் விடுமுறை

Published On 2023-04-17 18:22 GMT   |   Update On 2023-04-17 18:22 GMT
  • திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
  • அங்கு அனைத்து அரசு பள்ளிகளும் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை மூடப்படுகிறது.

அகர்தலா:

இந்தியாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெப்ப அலை காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்குகின்றனர்.

இதற்கிடையே, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெப்பநிலை அடுத்த சில நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து காணப்படுகிறது. கடும் வெயில் எதிரொலியாக திரிபுராவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஏப்.23-ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

ஏற்கனவே, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வெப்ப அலை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News