இந்தியா

ஜிம் செல்லாமலேயே 23 கிலோ எடையை குறைத்த தொழில் அதிபர்

Published On 2024-06-25 14:12 IST   |   Update On 2024-06-25 14:12:00 IST
  • எங்கு சென்றாலும் காரில் செல்லும் நிராஜால் இந்த அறிவுரையை பின்பற்ற முடியவில்லை.
  • வீட்டில் சமைக்கும் உணவுகளோடு பன்னீர், சோயா, பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.

ஜிம்முக்கு செல்லாமலும், உணவு கட்டுப்பாடுகள் இல்லாமலும் 10 மாதங்களில் 23 கிலோ எடையை தொழில் அதிபர் குறைத்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் நிராஜ். 10 மாதங்களுக்கு முன்பு 92 கிலோ எடையுடன் இருந்த இவர் எடையை குறைக்க உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ்கோஹெலை சந்தித்துள்ளார். அவர் வகுத்து கொடுத்த உடற்பயிற்சி திட்டங்களை நிராஜால் பின்பற்ற முடியவில்லை. இதையடுத்து தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று சதேஷ் அறிவுறுத்தி உள்ளார்.

எங்கு சென்றாலும் காரில் செல்லும் நிராஜால் இந்த அறிவுரையை பின்பற்ற முடியவில்லை. ஆனாலும் நாளடைவில் அதை பழக்கப்படுத்தி கொண்டார். அதோடு வீட்டிலேயே சாதாரண உடற்பயிற்சி செய்வதற்கும் சதேஷ் வடிவமைத்து கொடுத்தார். அதனுடன் வீட்டில் சமைக்கும் உணவுகளோடு பன்னீர், சோயா, பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டெப்ஸ் நடந்த நிராஜ் உணவையும் பின்பற்றியதன் மூலம் 10 மாதங்களில் 23 கிலோ எடை குறைந்ததாக அவரது உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி 4.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

Tags:    

Similar News