இந்தியா

எரிவாயு சிலிண்டர்,அமைச்சர் ஜித்து வகானி

ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 2 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்- தீபாவளி பரிசாக அறிவித்தது குஜராத் அரசு

Published On 2022-10-17 16:04 GMT   |   Update On 2022-10-17 16:04 GMT
  • இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்ட பயனாளிகள் இந்த சலுகையை பெறுவார்கள்.
  • இயற்கை எரிவாயுவுக்கு 10 சதவீத வாட் வரியை குறைக்க முடிவு

ஆமதாபாத்:

குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் ஆட்சி செய்து வரும் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பா.ஜ.க. அரசு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா 2 இலவச எரிவாயு சிலிண்டர் வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து பேசிய அம்மாநில கல்வி அமைச்சர் ஜித்து வகானி, 38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு இந்நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது என்றார். ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு திட்ட பயனாளிகள் இந்த சலுகையை பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயுவுக்கு (பி.என்.ஜி.) 10 சதவீத வாட் வரியை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றும் அவர் கூறினார். இது மக்களுக்கு அரசு அளிக்கும் தீபாவளி பரிசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News