இந்தியா
ராமர் கோவில் விவகாரத்தில் கட்சி விலகி இருக்கவேண்டும்: மூத்த காங்கிரஸ் தலைவர் கண்டனம்
- விழாவில் முன்னாள் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வினர் அயோத்தி கோவில் விழாவை அரசியலாக்க முயற்சிக்கின்றனர்.
அகமதாபாத்:
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் வரும் 22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முன்னாள் அரசியல்வதிகள், அதிகாரிகள், பிரபலங்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ராமர் கோவில் திறப்பு விழா பாஜக-ஆர்எஸ்எஸ் நிகழ்வு. இந்த விழா தேர்தல் நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது என்பதால் காஙகிரஸ் பங்கேற்காது என அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அர்ஜுன் மோத்வாடியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள செய்தியில், பகவான் ஸ்ரீ ராமர் ஒரு அபிமான கடவுள். இது நாட்டு மக்களின் நம்பிக்கை மற்றும் நம்பிக்கை சார்ந்த விஷயம். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி இதுபோன்ற அரசியல் முடிவுகளை எடுப்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.