இந்தியா
தொங்கு பால விபத்தில் என் குடும்பத்தினர் 12 பேரை இழந்துவிட்டேன்: பா.ஜ.க. எம்.பி. கண்ணீர்
- இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.
- 100-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஆமதாபாத்
குஜராத்தில் மோர்பி நகரத்தில் தொங்குபாலம் அறுந்து விழுந்து நேரிட்ட கோர விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 140-ஐ கடந்துள்ளது.
100-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த துயர சம்பவத்தில் ராஜ்கோட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியாவின் குடும்ப உறுப்பினர்கள் 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அவர் கூறும்போது, "இந்த விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 12 பேரை நான் இழந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது சகோதரி குடும்பத்தினர்" என கண்ணீருடன் தெரிவித்தார்.