இந்தியா

சிறந்த தீர்ப்பு...! எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு எதிரான உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்ற பிரதமர் மோடி

Published On 2024-03-04 07:40 GMT   |   Update On 2024-03-04 07:40 GMT
  • நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும்.
  • லஞ்சம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை- உச்சநீதிமன்றம்.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு வாக்கு அளித்தல், பணத்திற்காக அவைகளில் பேசுதல் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலக்கு பெற முடியாது.

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் வாக்களிக்க லஞ்சம் வாங்குவது, பொது வாழ்க்கையில் நேர்மையை சீர்குலைப்பதாகும்.

லஞ்சம் நாடாளுமன்ற சிறப்புரிமைகளால் பாதுகாக்கப்படவில்லை என்றும், 1998-ன் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் விளக்கம் அரசியலமைப்பின் 105 மற்றும் 194 வது பிரிவுக்கு முரணானது என்றும் ஏழு பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்க பதிவில் "வரவேற்பு!. உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட இந்த சிப்பான தீர்ப்பு தூய்மையான அரசியல் மற்றும் அரசு அமைப்பின் மீதான மக்களின் ஆழமான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News