இந்தியா

பாகிஸ்தான் டூ பஞ்சாப் கடத்தல்: கடந்த 3 ஆண்டுகளில் 28 ட்ரோன்கள் மீட்பு- மத்திய அரசு

Published On 2023-03-28 10:57 GMT   |   Update On 2023-03-28 10:57 GMT
  • ஆளில்லா விமானங்களில் இருந்து 125.174 கிலோ ஹெரோயின், 0.100 கிலோ அபின் கடத்தல்.
  • சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எல்லைகளில் திறம்பட ஆதிக்கம் செலுத்துகிறது.

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபிற்கு ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருட்களை கடத்துவதற்காக தேச விரோதிகள் மற்றும் கடத்தல்காரர்கள் ட்ரோன்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற 28 ஆளில்லா விமானங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமாணிக் மக்களவையில் தெரிவித்தார்.

சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ரோந்து, தடுப்பு அமைத்தல், கண்காணிப்புச் சாவடிகளை நிர்வகித்தல் போன்றவற்றை 24 மணி நேரமும் கண்காணிப்பதன் மூலம் எல்லைகளில் திறம்பட ஆதிக்கம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர்," மற்ற ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் தவிர ஆளில்லா விமானங்களில் இருந்து 125.174 கிலோ ஹெரோயின், 0.100 கிலோ அபின், ஒரு 9 மிமீ அளவு பிஸ்டல், 7 கைத்துப்பாக்கிகள் அல்லது மீட்கப்பட்டுள்ளன.

ட்ரோன்களைக் கையாள்வதில் உள்ள தொழில்நுட்பத்தை மதிப்பிடுவதற்கும் அதன் செயல்திறனைச் சான்றளிப்பதற்கும் மத்திய உள்துறை அமைச்சகம் பிஎஸ்எஃப் டிஜியின் மேற்பார்வையின் கீழ் ஆளில்லா தொழில்நுட்பக் குழுவை நிறுவியுள்ளது" என்றார்.

Tags:    

Similar News