வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது: கிரண் ரிஜிஜு
- சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயல்கின்றன.
- விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முற்சிக்கின்றன.
மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு "வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அரசாங்கம் முழுமையாக நிலையில் தயாராக உள்ளது. சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், அதன் விதிகள் குறித்து மக்களை தவறாக வழிநடத்தவும் முயல்கின்றன" எனத் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் விடுமுறை முடிவடைந்து நாளை பாராளுமன்றம் கூடுகிறது. இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக வேண்டுமென்றால் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.
மசோதா தாக்கல் செய்யப்படுவது தொடர்பாக பல்வேறு கட்சித் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது. இந்த மசோதா முதலில் மக்களவையில் அறிமுக்கப்படுத்தப்படும்.
இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, முஸ்லிம்களுக்கு நலனுக்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மக்களவையில் இந்த சட்ட திருத்த மசோதா முன்மொழியப்பட்டது. பின்னர் பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக்குழு பல்வேறு திருத்தங்கள் செய்தது. திருத்தம் செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையான இன்று இந்த மசோதாவில் உள்ள பரிந்துரைகளுக்கு எதிராக முஸ்லிம்கள் கருப்புப் பட்டை அணிய வேண்டும் என தூண்டுவது நாட்டிற்கு நல்லதல்ல.
எதிர்க்கட்சிகள் இந்த மனுவில் உள்ள விவரங்களை ஆய்வு செய்து, அரசுடன் விவாதங்களில் ஈடுபட வேண்டும். என்.டி.ஏ. கூட்டணி கட்சிகளில் மட்டுமல்ல, இந்தியா கூட்டணியில் உள்ள பல எம்.பி.க்களும், இந்த மசோதாவை தாக்கல் செய்ய வலியுறுத்தியுள்ளளனர்.
இந்த மசோதா பெரும்பாலான முஸ்லிம்களின் நலத்திற்கானது. வக்ஃபு வாரிய சொத்துகளை சுய நலத்திற்காக சுரண்டும் சில தலைவர்களுக்கு எதிரானது. கேரளா கத்தோலிக்க பிஷப் கவுன்சில் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இவ்வா கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.