இந்தியா

14 வருடத்திற்குப் பின் மீண்டும் அரசியலில் பாலிவுட் நடிகர் கோவிந்தா

Published On 2024-03-29 03:24 GMT   |   Update On 2024-03-29 03:24 GMT
  • 2004-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2009-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தா 2004-ல் அரசியலில் களம் இறங்கினார். அப்போது பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ராம் நாயக்கை தோற்கடித்து ஜெயன்ட் கில்லர்-ஆக திகழந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக 2004-ல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

2009-ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். அதன்பின் அரசியலில் இருந்து விலகினார். தற்போது சுமார் 14 ஆண்டுகள் கழித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.

சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் பிரபல நபராக இருந்தவர் கோவிந்தா என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

2004-2009 அரசியலுக்குப் பிறகு அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். மீண்டும் அரசியலுக்கு திரும்புவேன் என்ற நினைத்து பார்க்கவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளேன். வாய்ப்பு வழங்கப்பட்டால் கலை மற்றும் கலாசாரம் துறையில் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.

1980-ல் சினிமாத்துறையில் நுழைந்த கோவிந்தா, ஏராளமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் நடித்துள்ளார்.

Tags:    

Similar News