இந்தியா

அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரமா? பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன பயணி

Published On 2023-03-15 08:22 IST   |   Update On 2023-03-15 08:22:00 IST
  • பயணி ரத்னகர் திவேதி விமான கழிவறையில் புகைப்பிடித்தார்.
  • போலீசார் ரத்னகர் திவேதியை கைது செய்தனர்.

லண்டனில் இருந்து கடந்த 10-ந் தேதி மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. இதில் வந்த இந்தியாவை சேர்ந்த அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் பயணி ரத்னகர் திவேதி விமான கழிவறையில் புகைப்பிடித்தார். மேலும் விமானத்தில் மற்ற பயணிகளுடன் ரகளையில் ஈடுபட்டார்.

போலீசார் ரத்னகர் திவேதியை கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரை அந்தேரி மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜா்படுத்தினர்.

மாஜிஸ்திரேட்டு ரூ.25 ஆயிரம் பிணையில் அவரை ஜாமீனில் விடுவித்தார். அப்போது ரத்னகர் திவேதி, "பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் சட்டப்பிரிவு 336-ல் வழக்குப்பதிவு செய்தால் அதற்கு ரூ.250 தான் அபராதம் என ஆன்லைனில் பார்தேன். நான் வேண்டுமானால் அந்த அபராதத்தை செலுத்துகிறேன். ஜாமீனுக்கு பிணையாக ரூ.25 ஆயிரம் செலுத்தமுடியாது. அதை செலுத்துவதற்கு பதில் ஜெயிலுக்கு செல்வேன்" என்றார்.

இதையடுத்து மாஜிஸ்திரேட்டு அவரை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறி விமான பயணி ஜெயிலுக்கு போன விநோத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News