வழிக்கு வந்த F35.. 37 நாட்களுக்கு பின் கேரளாவில் இருந்து இங்கிலாந்து திரும்பும் போர் விமானம்
- இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர்.
- 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.
தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சிக்கித் தவித்த பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் F-35B ஸ்டெல்த் போர் விமானம், 37 நாட்களுக்குப் பிறகு இறுதியாக நாடு திரும்புகிறது.
பழுதுபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் விமானம் ஹேங்கரில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்டு, (இன்று) செவ்வாய்க்கிழமை இங்கிலாந்துக்கு புறப்படும் என்று அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானம் ஆகும். இதன் விலை சுமார் 110 மில்லியன் டாலர். இந்தியாவுடன் இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்ற இந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜூன் 14 அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆரம்பத்தில் ஒரு சிறிய குழுவுடன் வந்தாலும், பழுதுபார்க்கும் பணியை முடிக்க முடியவில்லை. இதன் விளைவாக, 25 பிரிட்டிஷ் பொறியாளர்கள் கொண்ட குழு இந்த மாதம் 6 ஆம் தேதி திருவனந்தபுரத்திற்கு வந்தது.
இறுதியாக, ஏர் இந்தியா பராமரிப்பு ஹேங்கரில் வைத்து பழுதுபார்ப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.