இந்தியா

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்திக்கு வீட்டுக்காவலா?

Published On 2022-08-22 02:06 GMT   |   Update On 2022-08-22 02:06 GMT
  • மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி.
  • மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது.

ஸ்ரீநகர்:

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி ஸ்ரீநகரில் வசித்து வருகிறார். அவர், சமீபத்தில் சோபியானில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சுனில்குமார் பட் குடும்பத்தினரை சந்திக்க நேற்று திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அங்கு செல்ல விடாமல் தடுத்து தன்னை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். தனது வீட்டு கேட்டுக்கு பூட்டு போட்டிருக்கும் படங்களையும், வீட்டுக்கு வெளியே சி.ஆர்.பி.எப். வாகனம் ஒன்று நிறுத்தப்பட்டு இருக்கும் படங்களையம் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதில் அவர், 'மத்திய அரசு காஷ்மீரி பண்டிட்டுகளின் அவலத்தை மறைக்க விரும்புகிறது. ஏனெனில் அரசின் கொடூரமான கொள்கைகள், காஷ்மீரை விட்டு வெளியேற விரும்பாதவர்களை இலக்கு வைத்து கொலை செய்ய வழிவகுத்தது. எங்களை பிரதான எதிரியாக முன்னிறுத்துவதற்காகத்தான் நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.

Tags:    

Similar News