இந்தியா

பீகாரில் இலவச மின்சாரம், மலிவு விலையில் கியாஸ் சிலிண்டர் வழங்கக்கோரி போராட்டம் நடத்திய ராப்ரி தேவி

Published On 2025-03-03 14:47 IST   |   Update On 2025-03-03 14:51:00 IST
  • பெண்களுக்கு மாதற்தோறும் 2500 ரூபாய், மானிய விலை சிலிண்டர் அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும்.
  • 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்.

பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் (JDU) ஆட்சி அமைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் முதல்வராக இருந்து வருகிறார்.

பீகார் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், ராஷ்டிரிய கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மனைவியும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி (தற்போது எதிர்க்கட்சி தலைவர்), கட்சித் தலைவர்களுடன் சட்டமன்றத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது "ஏழை பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் வழங்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்க வேண்டும். பெண்களுக்கு சமூக பாதுாப்பு வழங்க வேண்டும்" போன்றவை பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

அத்துடன் "நிதிஷ் குமார் அரசு மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி நாங்கள் அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்" என்றார்.

இதற்கிடையே அவரது மகனும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், "என்.டி.ஏ. அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால், இந்த வருடம் இறுதியில் நடைபெறும் தேர்தல் அவர்களுக்கு அரசுக்கு கடைசியாக இருக்கும். தேர்தலுக்குப் பிறகு நாங்கள் மக்களுக்கு தேவையானதை செய்வோம்" எனக் கூறியிருந்தார்.

Tags:    

Similar News