இந்தியா

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸ் வளையத்திற்குள்: ஆபரேசன் சிந்தூர் டிரைலர்தான்- ராஜ்நாத் சிங்

Published On 2025-10-18 15:44 IST   |   Update On 2025-10-18 15:44:00 IST
  • வெற்றி இந்தியாவின் பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.
  • பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. இந்தியாவின் மூலோபாய நம்பிக்கை என்பதை நிரூபித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சரோஜினி நகரில் பிரம்மோஸ் விண்வெளி யூனிட்டில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரிக்கப்பட்ட முதற்கட்ட ஏவுகணைகளை தொழிற்சாலையில் இருந்து வெளியேறுவதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

இந்தியாவின் எழுச்சி வலிமை சின்னமாக பிரம்மோஸ் திகழ்கிறது. வெற்றி இந்தியாவின் பழக்கமாகிவிட்டது என்பதை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது.

பிரம்மோஸ் வெறும் ஏவுகணை அல்ல. இந்தியாவின் மூலோபாய நம்பிக்கை என்பதை நிரூபித்துள்ளது. ராணுவத்தில் இருந்து கடற்படை, விமானப்படை என நம்முடைய பாதுகாப்புப் படைக்கு இது முக்கிய தூணாகியுள்ளது.

பிரம்மோஸின் வளையத்திற்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குல பகுதியும் உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின்போது நடந்தது வெறும் டிரைலர்தான். இந்தியாவால் பாகிஸ்தானை உருவாக்க முடியும் என்றால், நேரம் வந்தால்.., மேற்கொண்டு நான் சொல்ல வேண்டியதில்லை. நீங்கள் எல்லோரும் அறிவாளிகள். புரிந்து கொள்வீர்கள். இதை பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags:    

Similar News