இந்தியா

தேர்தல் மோசடி: 160 இடங்களை ஜெயிச்சி தரோம் என 2 பேர் எங்களை அணுகினர் - சரத் பவார் பகீர் குற்றச்சாட்டு

Published On 2025-08-10 10:22 IST   |   Update On 2025-08-10 10:22:00 IST
  • 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக உறுதியளித்து இரண்டு பேர் வந்தனர்.
  • அந்த 2 பேரும் டெல்லியில் எங்களை சந்திக்க வந்தார்கள்.

நடந்து முடிந்த கர்நாடகா, மாகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், அரியானா சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பஜகவுடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

குறிப்பாக மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி அதிக இடங்கள் பெற்ற நிலையில் 5 மாதங்கள் கழித்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோற்றதை குறிப்பிட்ட அவர் இந்த இடைப்பட்ட குறுகிய காலத்தில் புதிதாக 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நாக்பூரில் ஊடகங்களிடம் பேசினார்.

அப்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் மோசடி செய்வதாக வாக்குறுதி அளித்து இரண்டு பேர் தன்னை அணுகியதாக தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத் தேர்தலில் 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக உறுதியளித்து இரண்டு பேர்  அணுகியதாகவும், அதற்கான வழி அவர்களிடம் இருப்பதாகவும் பவார் கூறினார்.

இருப்பினும், தானும் ராகுல் காந்தியும் இதை நிராகரித்ததாக அஜித் தலைவர் தெரிவித்தார்.

"அந்த 2 பேரும் டெல்லியில் எங்களை சந்திக்க வந்தார்கள். எங்கள் கூட்டணி 288 இடங்களில் 160 இடங்களை வெல்ல உதவுவதாக அவர்கள் உறுதியளித்தனர். அவர்கள் சொன்னதைக் கேட்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

தேர்தலை நாசமாக்குவதற்கு தங்களிடம் எல்லா வழிகளும் இருப்பதாக அவர்கள் கூறினர். இருப்பினும், ராகுல் காந்தியும் நானும் அவர்களைப் புறக்கணிக்க முடிவு செய்தோம். இது எங்கள் வழி அல்ல என்ற செய்தியையும் அவர்களுக்கு வழங்கினோம்" என்று சரத் பவார் தெரிவித்தார்.

Tags:    

Similar News