இந்தியா

வாக்குப்பதிவின்போது வாக்காளர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல வசதி -தேர்தல் கமிஷன்

Published On 2025-05-24 07:40 IST   |   Update On 2025-05-24 07:40:00 IST
  • தேர்தலின்போது வாக்களிப்பதை எளிமையாக்க இந்திய தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளை வழங்க வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கூடாரம் அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

புதுடெல்லி:

இந்திய தேர்தல் கமிஷன் இணை இயக்குனர் பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேர்தலின்போது வாக்களிப்பதை எளிமையாக்க இந்திய தேர்தல் கமிஷன் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும்போது தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்து செல்ல வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வாக்குச்சாவடி அலுவலர்களால் வழங்கப்படும் பூத் சிலிப்புகளை வாக்குப்பதிவு தினத்தன்று, வாக்காளர்கள் எடுத்து செல்லாத பட்சத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்புகளை வழங்கும் வகையில் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் கூடாரம் அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News