இந்தியா

திருப்பதி கோவிலுக்கு 3,250 தடவை நடந்து சென்று தரிசனம் செய்த முதியவர்

Published On 2025-12-10 15:18 IST   |   Update On 2025-12-10 15:18:00 IST
  • ஓய்வு பெற்ற பிறகு வாரத்தில் 4 நாட்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
  • 71 வயதிலும் ஏழுமலையானை தரிசிக்க அவர் என்னை ஆரோக்கியமாக வைத்துள்ளதாக கூறினார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர் வெங்கட ரமணமூர்த்தி (வயது 71). இவர் பாரத ஸ்டேட் வங்கியில் மேளராக வேலை செய்து ஓய்வு பெற்றார். வெங்கடரமண மூர்த்தி இதுவரை 3,460 தடவை ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.

ஏழுமலையானுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக கருதி திருப்பதி மலைக்கு அலிபிரி நடப்பாதையில் 3,250 தடவை நடந்து சென்று தரிசனம் செய்து இருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகு வாரத்தில் 4 நாட்கள் ஏழுமலையானை தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

நடை பாதையில் செல்லும்போது கோவிந்தா, கோவிந்தா என்ற நாமத்தை உச்சரித்தபடி நடந்து சென்றால் 2,388 படிகளையும் 1½ மணி நேரத்தில் கடந்து மலைக்கு செல்வதாக தெரிவித்தார். 71 வயதிலும் ஏழுமலையானை தரிசிக்க அவர் என்னை ஆரோக்கியமாக வைத்துள்ளதாக கூறினார். இது ஏழுமலையான் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News