இந்தியா
டெல்லியில் நிலநடுக்கம்- பீதியில் மக்கள்
- டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
டெல்லியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியை சுற்றியுள்ள நொய்டா, காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 9 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கமானது அரியானாவின் குராவாரா பகுதியில் மையம் கொண்டிருந்ததாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும், அது மிகவும் பயமாகவும் வலுவாக இருந்ததாகவும் டெல்லியை சேர்ந்த ஒருவர் கூறினார்.