இந்தியா
null

கேஸ் சிலிண்டர் திருட முயற்சி? ஓடும் ஆட்டோவில் தரதரவென இழுத்துச்சென்ற ஓட்டுனர்- வைரலாகும் வீடியோ

Published On 2024-04-20 09:02 GMT   |   Update On 2024-04-20 09:40 GMT
  • பின்னால் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவு.
  • வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கேஸ் சிலிண்டர் திருட முயன்றதாக கூறி ஒருவரை ஓடும் ஆட்டோவில் தரதரவென இழுத்துச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இந்த சம்பவம் நடந்த இடம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இந்த வீடியோவில், ஓடும் ஆட்டோவின் பின்னால் ஒரு நபர் தொங்கியநிலையில் ஆட்டோ வேகமாக செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

இதில், அந்த நபரின் கால்கள் சாலையில் தேய்ந்தபடி பல கிலோ மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆட்டோ ஓட்டுனரை சரமாரியாக கமென்டில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

ஆட்டோ பின்னால் ஒரு நபர் அலறியபடி இழுத்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News