இந்தியா

பயப்படாதீங்க.. வருமான வரித்துறையினர் வரமாட்டாங்க - கலந்துரையாடலில் JOKE அடித்த மோடி - வீடியோ

Published On 2025-04-08 14:35 IST   |   Update On 2025-04-08 14:35:00 IST
  • 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பயனாளிகள் இன்று பிரதமரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது
  • இதன்பிறகு அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று முத்ரா யோஜனா பயனாளிகளுடன் கலந்துரையாடினார். முத்ரா யோஜனாவின் பயனாளிகள் பிரதமரின் இல்லத்தில் அழைக்கப்பட்டனர்.

முத்ரா யோஜனாவின் 10 ஆண்டுகள் நிறைவையொட்டி பயனாளிகள் இன்று பிரதமரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பயனாளிகளிடம் மோடி கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன் போது, பிரதமர் நரேந்திர மோடி ஒரு பயனாளியிடம், உங்கள் வருமானம் என்ன என்று கேட்டார். பிரதமர் மோடியின் இந்தக் கேள்வியால் பயனாளி தயங்கினார்.

இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "நிதியமைச்சர் என் அருகில் அமர்ந்திருக்கிறார், நான் அவரிடம் சொல்கிறேன். பயப்படாதீர்கள். வருமான வரித்துறையினர் வரமாட்டார்கள்" என்று கிண்டலாக கூறினார். இதைக் கேட்டு அனைத்து பயனாளிகளும் சிரித்தனர். இதன்பிறகு அந்த வாலிபர் தனது மாத வருமானம் ரூ.2.5 லட்சம் என்று தெரிவித்தார்.

முத்ரா திட்டம் பின்தங்கிய குறு நிறுவனங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன்கீழ் ரூ.10 லட்சம் வரை அந்நிறுவங்களக்குக்கு கடன் வழங்கப்படுகிறது.  

Tags:    

Similar News