இந்தியா

லண்டனில் குடியேற குடும்பத்துடன் புறப்பட்ட மருத்துவர்.. மனைவி, 3 குழந்தைகளுடன் விமான விபத்தில் பலி

Published On 2025-06-13 10:35 IST   |   Update On 2025-06-13 10:35:00 IST
  • தொழில்முறை முன்னேற்றத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் இந்த முடிவை எடுத்தனர்.
  • அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர்.

இதில் ராஜஸ்தானைச் சேர்ந்த பத்து பேரும் அடங்குவர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தொழில் ரீதியாக லண்டனுக்கு குடியேற சென்ற மருத்துவர்களின் குடும்பம் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது.

டாக்டர் பிரதீக் ஜோஷி மற்றும் அவரது மனைவி டாக்டர் கோமி வியாஸ் ஆகியோர் தங்கள் மூன்று குழந்தைகளான மிராயா, நகுல் மற்றும் பிரத்யுத் ஆகியோருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க லண்டனுக்குப் பயணம் செய்தனர்.

அவர்கள் தொழில்முறை முன்னேற்றத்திற்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் இந்த முடிவை எடுத்தனர்.

ஆனால் நடந்து முடிந்த கோர விபத்தில் டாக்டர் பிரதீக் ஜோஷி, டாக்டர் கோமி வியாஸ் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

Tags:    

Similar News