இந்தியா

வரி மறுமதிப்பீட்டை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த மனு தள்ளுபடி- டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2024-03-28 10:13 GMT   |   Update On 2024-03-28 10:13 GMT
  • காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.
  • இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

புதுடெல்லி:

2014 முதல் 2017 வரையிலான வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு சமீபத்தில் தள்ளுபடி செய்து இருந்தது.

இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு (2017-18, 2018-19, 2019-20, 2020-21) வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சி மற்றொரு மனுவை டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது.

நீதிபதி யஷ்வந்த் சர்மா, புருஷேந்திரகுமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 மனுக்களையும் இன்று தள்ளுபடி செய்தது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகும்.

Tags:    

Similar News