இந்தியா

ஆந்திராவில் சிக்கிய பிசாசு மீன்

Published On 2025-04-26 10:41 IST   |   Update On 2025-04-26 10:41:00 IST
  • கருப்பு நிற கோடுகளுடன் கூடிய அடர் பச்சை நிற மீன் ஒன்று சிக்கியது.
  • கடலின் அடிப்பகுதியில் வாழும் பிசாசு மீன்கள் ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாகக் கூறப்படுகிறது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் குரோசூரில் உள்ள ஒரு குளத்தில் வண்ணமயமான மீன்கள் காணப்பட்டன. முக்காந்தி என்ற உள்ளூர் மீனவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது கருப்பு நிற கோடுகளுடன் கூடிய அடர் பச்சை நிற மீன் ஒன்று சிக்கியது. அதன் உடல் முழுவதும் முட்கள் நிறைந்திருந்தது. உள்ளூர் மீனவர்கள் இதை சக்கர் மீன் என்று அழைக்கிறார்கள். சில பகுதிகளில் இது பிசாசு மீன் என்றும் அழைக்கப்படுகிறது.

கடலின் அடிப்பகுதியில் வாழும் பிசாசு மீன்கள் ஆறுகள் வழியாக குளங்களை அடைவதாகக் கூறப்படுகிறது. சிலர் இந்த மீன்களை மீன் தொட்டிகளில் வளர்க்கின்றனர். பிசாசு வகை மீன்களை சாப்பிடுவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News