இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாயுடன் வந்த பக்தர்கள்- தரிசனம் செய்ய அனுமதி மறுப்பு

Published On 2023-07-04 05:15 GMT   |   Update On 2023-07-04 05:15 GMT
  • பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.
  • சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் மது, மாமிசம், பீடி, சிகரெட், கஞ்சா வெளியிட்ட பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வளர்ப்பு பிராணிகளை வாகனங்களில் அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் ஒரு வேனில் திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் வந்த வேனில் வீட்டு வளர்ப்பு நாயை அழைத்து வந்தனர்.

அலிப்பிரி சோதனை சாவடியில் சரிவர வாகனத்தை சோதனை செய்யாததால் பக்தர்கள் நாயை மலைக்கு கொண்டு சென்றனர்.

திருப்பதி மலைக்கு நாயுடன் வந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் வளர்ப்பு நாயை எடுத்து வந்த பக்தர்களை மடக்கினர். நாயுடன் திருப்பதி மலைக்கு வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் அந்த பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.

சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News