இந்தியா

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை- பட்ஜெட் குறித்து டெல்லி முதல்வர் கருத்து

Published On 2023-02-01 11:22 GMT   |   Update On 2023-02-01 11:22 GMT
  • இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நிவாரணமும் இல்லை.
  • வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை.

புதுடெல்லி:

மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய அரசு மீண்டும் டெல்லி மக்களிடம் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினார்.

கடந்த ஆண்டு 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்திய போதிலும், மத்திய பட்ஜெட்டில் டெல்லிக்கு 325 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றார் கெஜ்ரிவால்.

இந்த பட்ஜெட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த எந்த நிவாரணமும் இல்லை. மாறாக, இந்த பட்ஜெட் பணவீக்கத்தை அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டத்தை போக்க உறுதியான திட்டம் எதுவும் இல்லை. கல்விக்கான பட்ஜெட்டை 2.64 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாகக் குறைப்பது துரதிர்ஷ்டவசமானது. சுகாதார பட்ஜெட்டை 2.2 சதவீதத்தில் இருந்து 1.98 சதவீதமாக குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

Tags:    

Similar News