இந்தியா

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி- செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

Published On 2025-11-11 09:34 IST   |   Update On 2025-11-11 09:34:00 IST
  • கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது.
  • செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தவிர எஞ்சிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.

கார் வெடித்து சிதறியதில் அதன் பாகங்கள் சுமார் 300 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் பலர் காயம் அடைந்தனர்.

இந்த பயங்கர சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கை உஷார்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் இன்று ஒருநாள் மூடப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று ஒரு நாள் செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் (லால் கிலா மெட்ரோ நிலையம்) மூடப்படுகிறது.

செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் தவிர எஞ்சிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News