இந்தியா
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல்.. LLB பட்டதாரி கைது!
- போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பை அடுத்து, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
- திருமணப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், உ.பி. காசியாபாத்தில் ஒரு நபரை சிறப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
கடந்த வியாழன் இரவு காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டல் அழைப்பை அடுத்து, தீவிர விசாரணை தொடங்கப்பட்டது.
குடிபோதையில் மிரட்டல் விடுத்த அந்த சட்டப் பட்டதாரி (LLB) எனத் தெரியவந்தது. திருமணப் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் இவ்வாறு செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து போலி போலீஸ் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. முதல்வர் ரேகா குப்தாவின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.