காதலன் கண் முன்னே தலித் மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கும்பல் - ஒடிசாவில் பயங்கரம்
- காதலனை மரத்தில் கட்டி வைத்து, கும்பலில் இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி புவனேஸ்வரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
ஒடிசாவில் 19 வயது தலித் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
பூரி மாவட்டத்தில் கடற்கரை அருகே அமைந்துள்ள பிரபல சுற்றுலாத் தலமாக விளங்கும் பாலிஹர்சந்தி கோயில் அருகே கடந்த சனிக்கிழமை மதியம் இந்த சம்பவம் நடந்தது.
மாணவி தனது காதலனுடன் கோவிலுக்கு அருகில் அமர்ந்திருந்தபோது, இளைஞர்கள் கும்பல் அவர்களின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து அவற்றை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டுள்ளது.
பணம் கொடுக்க மறுத்ததால், காதலனை மரத்தில் கட்டி வைத்து, கும்பலில் இருவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். இதன்பின் கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பாக மாணவி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்காவது குற்றவாளியை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இதேபோல், கடந்த வாரம் புதன்கிழமை, பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக கூறி புவனேஸ்வரில் உள்ள ஒரு லாட்ஜூக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் மூன்று ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களுக்காக ஆளும் பாஜக அரசை பிஜு ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட காட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.