இந்தியா

வரும் 25ம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல்

Published On 2024-05-23 07:27 GMT   |   Update On 2024-05-23 07:28 GMT
  • நாளை மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
  • கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வட தமிழக-தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று காலை 5.30 மணிக்கு காற்றழுத்தத் தாழ்வு உருவானது.

இது வடகிழக்கு திசையில் நகா்ந்து வருகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும், அதன்பிறகு, மேலும் வலுப்பெற்று மே 25-ந் தேதி புயலாக உருவெடுக்கும்.

இதுபோல தெற்கு கேரளம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மீதும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இந்த நிகழ்வுகள் காரணமாக இன்று முதல் மே 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் வரும் 25ம் தேதி ரீமால் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயல் 26ம் தேதி மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஓமன் நாடு பரிந்துரைப்படி புயலுக்கு ரீமால் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Tags:    

Similar News