இந்தியா

மோன்தா புயலால் ரூ.5,265 கோடி இழப்பு.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

Published On 2025-10-31 00:05 IST   |   Update On 2025-10-31 00:05:00 IST
  • ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.
  • துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மோன்தா புயலின் பாதிப்பால், ஆந்திரப் பிரதேசத்துக்கு குறைந்தது ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகில் கரையைக் கடந்தது.

இந்தப் புயலால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. புயல் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, மோன்தா புயலால் சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு ரூ. 2,079 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயத் துறைக்கு ரூ.829 கோடியும், மீனவளத் துறைக்கு ரூ.1,270 கோடியும் இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.5,265 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பல மாவட்டங்களில் இன்னும் நெல் பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால், சேதத்தின் முழுமையான இறுதி அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

எனினும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் துரித செயல்பாடுகள் மூலம் உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.  

Tags:    

Similar News