இந்தியா

கர்நாடகத்தில் தொடரும் வரலாறு 1985-ம் ஆண்டுக்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சி அமைக்கவில்லை

Published On 2023-05-14 06:24 IST   |   Update On 2023-05-14 06:24:00 IST
  • பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது.
  • காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது.

பெங்களூரு

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. மாநிலத்தில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து கொள்ள பா.ஜனதா தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்திருந்தார்கள்.

ஆனாலும் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. இதன்மூலம் கர்நாடகத்தில் 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஆட்சியில் இருக்கும் கட்சி, தொடர்ந்து வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்ததில்லை என்ற வரலாறு தொடருகிறது. அதாவது 1985-ம் ஆண்டுக்கு பின்பு ஒவ்வொரு கட்சியும் மாறி, மாறி வெற்றி பெற்று தான் ஆட்சியை பிடித்திருந்தது.

அதன்படி, தற்போதும் ஆட்சியில் இருந்த பா.ஜனதாவால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல், காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறது. கர்நாடக அரசியலில் கடந்த 38 ஆண்டு வரலாற்றில் தொடர்ந்து இருமுறை எந்த கட்சியும் ஆட்சியை தக்க வைத்து கொண்டதில்லை என்பது நேற்று நடந்த தேர்தல் முடிவுகள் மூலமாக உறுதியாகி இருக்கிறது.

Tags:    

Similar News