இந்தியா

பிரதமர் மோடிக்கு மாற்று யார்? என்ற கேள்விக்கு சசி தரூரின் பதில்

Published On 2024-04-03 11:47 IST   |   Update On 2024-04-03 11:47:00 IST
  • மீண்டும் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், பிரதமர் மோடிக்கு மாற்று தனிநபர் யார்? என்பதை குறிப்பிடும்படி கேட்டார்.
  • பாராளுமன்ற முறையில் இந்த கேள்வி பொருத்தமற்றது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சசி தரூர். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூன்று முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 4-வது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளார்.

இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் பிரதமர் மோடிக்கு எதிராக களம் இறங்கும் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை எதிர்க்கட்சிகள் தெரிவிக்கவில்லை. தேர்தல் முடிந்த பின், பிரதமர் பதவிக்கு யார் நிறுத்தப்படுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் சசி தரூரிடம் பிரதமர் மோடிக்கான மாற்று யார்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார்.

சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

மீண்டும் ஒரு பத்திரிகையாளர் என்னிடம், பிரதமர் மோடிக்கு மாற்று தனிநபர் யார்? என்பதை குறிப்பிடும்படி கேட்டார். பாராளுமன்ற முறையில் இந்த கேள்வி பொறுத்தமற்றது. பாராளுமன்ற முறையில் நாம் தனி நபரை தேர்வு செய்வதில்லை. இந்தியாவின் பன்முகத்தன்மை, பன்மைத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பாதுகாக்க விலைமதிப்பற்ற கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பை பிரதிபலிக்கும் கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை தேர்ந்தெடுக்கிறோம்.

மோடிக்கு மாற்று அனுபவம் வாய்ந்த, திறமையான, பன்முகத்தன்மை கொண்ட, மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் அளிக்கக் கூடியவர்கள்.

பிரதமர் தேர்வு என்பது 2-வது கட்டம்தான். எந்த குறிப்பிட்ட நபரை அவர்கள் பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பது 2-வது பட்சம்தான். நம்முடைய ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாப்பதுதான் முன்னமையானது.

Tags:    

Similar News