இந்தியா
ராணுவ நடவடிக்கையை தேர்தலுக்காக வெட்கமின்றி பயன்படுத்திய மோடி - சசி தரூர் கருத்தை நினைவூட்டிய காங்கிரஸ்
- தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர்' புத்தகத்தில் மோடியை விமர்சித்தார்.
- இது காங்கிரஸ் ஒருபோதும் செய்யாத ஒன்று
ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கம் கொடுக்க காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அயல்நாட்டு பயணத்தில் உள்ளார். செல்லும் இடமெல்லாம் மோடியை புகழ்ந்து அவர் பேசுவது காங்கிரசை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா, 'தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர்' புத்தகத்தில் மோடியை விமர்சித்து தரூர் எழுதிய பகுதியை பகிர்ந்துள்ளார்.
அதில், "2016 ஆம் ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் கிளர்ச்சியாளர்களைத் துரத்துவதற்கான இராணுவ நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி தனது கட்சிக்கான தேர்தல் பிரச்சார கருவியாக வெட்கக்கேடான முறையில் பயன்படுத்திக் கொண்டார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நடந்திருந்தாலும், இது காங்கிரஸ் ஒருபோதும் செய்யாத ஒன்று" என்று சசி தரூர் தரூர் எழுதியுள்ளார்.