இந்தியா

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய்: காங்கிரஸ் வாக்குறுதி

Published On 2024-03-13 11:48 GMT   |   Update On 2024-03-13 11:48 GMT
  • மகாராஷ்டிராவில் காங்கிரஸ் சார்பில் மகளிர் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
  • அப்போது பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்கியது.

மும்பை:

வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் கவனத்தை ஈர்க்க பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வழங்கி வருகின்றன. அதன்படி, காங்கிரஸ் கட்சியும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி எம்.பி.யான ராகுல் காந்தி மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

மகாராஷ்டிராவின் துலே மாவட்டத்தில் இன்று நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வழங்கினார். அதன் விவரம் வருமாறு:

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.

ஆஷா, அங்கன்வாடி மற்றும் மதிய உணவு திட்ட பெண் ஊழியர்களுக்காக, மத்திய பட்ஜெட்டில் நிதி இரு மடங்காக உயர்த்தப்படும்.

பெண்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் வழக்குகளை எதிர்த்து போராடுவது குறித்து வழிகாட்டுவதற்கு ஒரு அதிகாரி நியமிக்கப்படுவார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News