இந்தியா

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

Published On 2024-04-05 11:45 IST   |   Update On 2024-04-05 11:46:00 IST
  • எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.
  • நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைமைக் கழகத்தில் இன்று வெளியிடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் முன்னாள் நிதியமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ப.சிதம்பரம் அதில் உள்ள முக்கியம்சங்களை குறிப்பிட்டு பேசினார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து உயர்த்தப்படும்.

மத்திய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் இடங்கள் நிரப்பப்படும்.

நாடு முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும் போன்றவை தேர்தல் அறிக்கையில் இடம் பிடித்திருந்தன.

Tags:    

Similar News