இந்தியா
பிரதமர் மோடி நவீன ராவணன்: காங்கிரஸ் தலைவரின் சர்ச்சை பேச்சு
- ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என்றார்.
- உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவரான உதித்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் மோடி நவீன ராவணனின் சின்னமாகத் திகழ்கிறார். ஒவ்வொரு தசராவின் போதும் ராவணின் உருவ பொம்மை எரிக்கப்படும்.
ராவணின் தங்க அரண்மனையை எரித்தது போல மோடியின் அரண்மனை அழிக்கப்படும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியை ராவணனுடன் ஒப்பிட்டு உதித் ராஜ் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், உதித் ராஜ் கருத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா வெளியிட்ட அறிக்கையில், இதுதான் காங்கிரசின் உண்மை முகம். பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இருப்பது அவர்களின் வழக்கமான செயல்பாட்டு நடைமுறையாகி விட்டது என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.