இந்தியா

திருப்பதி கோவிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய சென்னை இஸ்லாமிய தம்பதி.

திருப்பதி கோவிலுக்கு சென்னை இஸ்லாமிய தம்பதி ரூ.1 கோடி நன்கொடை

Published On 2022-09-21 11:09 IST   |   Update On 2022-09-21 11:09:00 IST
  • திருமலையில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட ஸ்ரீபத்மாவதி ஓய்வறைக்கு ரூ.87 லட்சம் வழங்கினர்.
  • ஏழுமலையானிடம் மிகுந்த பக்தி கொண்ட இவர்கள் அன்னதான அறக்கட்டளைக்கு இதுபோன்று பலமுறை நன்கொடை வழங்கி உள்ளனர்.

திருப்பதி:

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சுபீனா பானு-அப்துல் கனி தம்பதி. இவர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கினர்.

விஐபி பிரேக் தரிசனம் முடிந்த பிறகு, அவர்கள் குடும்பத்துடன் ரங்கநாயகர் மண்டபத்தில் இதற்கான வரைவோலையை செயல் அதிகாரி தர்மாரெட்டியிடம் வழங்கினர்.

இதில் அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.15 லட்சமும் திருமலையில் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட ஸ்ரீபத்மாவதி ஓய்வறைக்கு ரூ.87 லட்சத்தில் புதிய மரச்சாமான்கள் மற்றும் சமையல் பாத்திரங்களுக்காக வழங்கினர்.

ஏழுமலையானிடம் மிகுந்த பக்தி கொண்ட இவர்கள் அன்னதான அறக்கட்டளைக்கு இதுபோன்று பலமுறை நன்கொடை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News