இந்தியா

151 இடங்களில் தெலுங்கு தேசம், 24 இடங்களில் ஜனசேனா: முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published On 2024-02-24 07:35 GMT   |   Update On 2024-02-24 07:35 GMT
  • 175 இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி போட்டி.
  • 24 இடங்களில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிடுகிறது.

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் சேர்த்து நடத்தப்பட இருக்கிறது. ஆந்திர மாநில முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.

அவரை வீழ்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக பவன் கல்யாண் கட்சியான ஜனசேனா உடன் கூட்டணி அமைக்க முடிவு செய்தார். இது தொடர்பாக தெலுங்குதேசம்- ஜனசேனா கட்சிகள் இடையே பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 175 சட்டமன்ற இடங்களில் 151 இடங்களில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 24 இடங்களிலும் போட்டியிடவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சந்திரபாபு நாயுடு- பவன் கல்யாண் கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.

சந்திரபாபு நாயுடு 94 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதேவேளையில் பவன் கல்யாண் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் பவன் கல்யாண் கட்சி சந்திரபாபு நாயுடு கூட்டணியல் 3 இடங்களில் போட்டியிடுகிறது.

Tags:    

Similar News