இந்தியா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய மந்திரி நிதின் கட்கரி சாமி தரிசனம்
- கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
- வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மத்திய மந்திரி நிதின் கட்கரி நேற்று இரவு திருப்பதி வந்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். நேற்று இரவு பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை விஐபி பிரேக் தரிசனத்தில் நிதின் கட்கரி சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று மாலை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
திருப்பதியில் நேற்று 70,363 பேர் தரிசனம் செய்தனர். 25,636 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.